சுதந்திரப் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட உளுந்தூர்பேட்டை விமான நிலையத்தின் ஓடு பாதையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் கடந்த 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்காக இந்திய ராணுவத்தை அனுப்ப தயார் செய்யப்பட்ட உளுந்தூர்பேட்டை விமானதளம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பயன்பாடும் இல்லாமல் பயன்பாடு இன்றி காணப்படுகிறது இதனால் அருகில் உள்ள நகர், மன்னார்குடி, நைனாகுப்பம், மதியனூர், மாம்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விமானதளத்தின் ஓடுபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் பயிர் செய்து வந்ததோடு உலர் களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர் இரவு நேரங்களில் உளுந்தூர்பேட்டை விமான ஓடுதளம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உளுந்தூர்பேட்டை விமான தளத்தின் ஓடு பாதைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் விமானதள ஓடு பாதையில் இன்று தூய்மை பணி நடைபெற்றது அதனை விரைந்து முடிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
No comments