Breaking News

கே. வி. குப்பம் அருகே மீண்டும் பரபரப்பு சிறுத்தை தாக்கி பெண் பலியான மலை கிராமப் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டமா ?..

 


வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த துருவம் மலை கிராமத்தில் கடந்த 18ம் தேதி அன்று சிறுத்தை தாக்கி பெண் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து அங்குள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர் 


 இந்நிலையில் துருவம் கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்ளை மேடு என்னும் அடர்ந்த மலை கிராமத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ்,ரஞ்சிதா தம்பதியின் ஆட்டுக்குட்டியை சிறுத்தை கடித்துக் குதற வந்தபோது அவ்விடத்திலிருந்து மற்றொரு ஆட்டின்மீது நகம் பயந்துள்ளது 


 தொடர்ந்து அங்குள்ள மக்கள் கூச்சல் இட்டதை தொடர்ந்து சிறுத்தை மின்னல் வேகத்தில் ஓடிச் சென்றதாகவும் மேலும் அடுத்த 2 மணி நேரத்தில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எள்ளு கொள்ளையைச் சேர்ந்த விவசாயி ராஜகோபால், கனகா தம்பதியின் ஆட்டை கடித்து இழுத்துச் சென்றதாகவும் அங்குள்ளவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து வனச்சரகர் வினோ பாவா தலைமலான வனத்துனையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர் 


 விசாரணையின் முடிவில் அவர் கூறியதாவது மேற்கண்ட நபர்களின் ஆடுகளை கடித்தது சிறுத்தையாக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் சிறுத்தை மனிதர் அல்லது கால்நடைகளை வேட்டையாடினால் குறைந்தது 5 முதல் 7 நாட்கள் வரை வேட்டையாடாது 


 அவர்கள் கூறும் இடத்தில் உள்ள கால் தடயமானது நாய், பூனை வகையைச் சேர்ந்தது சிறுத்தையின் கால் தடம் அல்ல சிறுத்தை பொருத்தவரை நடந்து அல்லது நின்று கொண்டிருப்பவர்களை தாக்காது பொதுவாக சிறுத்தைக்கு வெட்கப்படும் குணம் உண்டு


 சிறுத்தை வேட்டையாட வேண்டும் என்று முடிவு செய்தால் விடியற்காலை, அல்லது அந்தி சாயும் மாலை வேலைகளில் தான் வேட்டையாடும் தற்போது அவர்கள் கூறுவது உண்மை இல்லை சிறுத்தை ஓட ஆரம்பித்தால் சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை நிற்காமல் ஓடும் இவர்கள் கூறும் இடத்தில் உள்ள தொலைவும் இதில் வேறுபடுகிறது 


 மேற்கண்ட கிராமங்களில் சிறுத்தை தாக்கி இருப்பதாக அவர்கள் கூறுவது முற்றிலும் பொய் தேவையின்றி வதந்திகளை பரப்ப வேண்டாம் இதேபோல் வீரச்செட்டிப்பல்லி என்னுமிடத்தில் சிறுத்தை குட்டிகளுடன் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்


 இது குறித்து கண்காணிப்பு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் இளம் பெண் பலியாகி மூன்றே நாட்களில் தொடர்ந்து அருகருகே உள்ள வனப் பகுதிகளில் கால்நடைகளை சிறுத்தை தாக்கியதாக அப்பகுதிகளில் மக்கள் கூறுவதால் சுற்றுப்புற மலை கிராமத்தில் தற்போது மக்கள் தூக்கம் இல்லாமல் பீதியில் உள்ளனர் 


- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!