பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இஸ்ரேல் இசைக்கலைஞர்,பாஜக இளைஞரணி நிர்வாகிகள் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார்..
புதுச்சேரி காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய அரசுக்கு சொந்தமான அசோகா ஹோட்டல் இயங்கி வருகிறது.புத்தாண்டை முன்னிட்டு சென்னையை சேர்ந்த யாஷ் ஈவன்ட்ஸ் மூலம் இஸ்ரேல் நாட்டின் இசைக்கலைஞர் அவிஷியின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கேரளா, மும்பையில் இவரது நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ள நிலையில் புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் பாஜக இளைஞரணி மாநில தலைவர் அற்புதராஜ் தலைமையில் நிர்வாகிகள், முதுநிலை காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.அப்போது பொதுச்செயலாளர்கள் வருண்,கணபதி, துணைத் தலைவர் விஜய், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, இளவரசன், ராசு உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
இஸ்ரேல் கலைஞரின் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடந்தால் போதை நடமாட்டம் அதிகரிப்பதுடன் கலாச்சார சீர்கேடு ஏற்படும் என தெரிவித்தனர். புகாரின் மீது காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும், இதனையும் மீறி நிகழ்ச்சி நடத்த முன்வந்தால் அசோகா ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
No comments