சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள்..!!
தூத்துக்குடியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு ரூ.4,66,998 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில், ஆட்சியர் இளம்பகவத், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ரூ.96,011 மதிப்பீட்டில் 1 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ரூ.40,047 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு திறன்பேசிகளையும், ரூ.45,780 மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ரூ.212000 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு நாற்காலி, ரூ.55,600 மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு காதொலி கருவி, ரூ.17,560 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு பிரெய்லி கடிகாரம் என மொத்தம் 40 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.4,66,998 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 520 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கி துணைத் தலைவர் பாலமுருகன், பேச்சுப் பயிற்சியாளர் ராஜேஸ்வரி, உதவி துணைத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments