Breaking News

விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்..

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோவிலில் கலங்கரை சமூக செயல்பாட்டு மையம் நாகப்பட்டினம் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் நாகப்பட்டினம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை மற்றும் உலக மனித உரிமைகள் தினத்தை ஒட்டி அண்ணா திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க தலைவி கஸ்தூரி தலைமை தாங்கினார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, இயக்குனர் அருள்பணி குழந்தைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் விதவைப் பெண்களுக்கு 1200 லிருந்து 1500 ரூபாயாக உதவித்தொகையை உயர்த்த வேண்டும், கைம் பெண்கள் நல வாரியத்தில் அடையாள அட்டை வழங்கி புதிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும், விதவை பெண்களுக்கு எதிரான வன்கொடைமை தடுப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பேசினர். முன்னதாக செம்பனார்கோவில் மேலமுக்கட்டில் இருந்து கீழ முட்டு வரை விழிப்புணர்வு பேரணியாக வந்தனர். இதில் ஏராளமான விதவை பெண்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!