சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி சட்டமன்ற செயலரிடம் சுயேச்சை எம்எல்ஏ நேரு கடிதம்..
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் தயாளனிடம் உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு கடிதம் கொடுத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நேரு எம்எல்ஏ,சட்ட விதிமுறைகள் மீறி சபாநாயகர் செல்வம் தொடர்ந்து செயல்படுகிறார் என்றும்,அனைத்து அரசு விழாக்களிலும் தன்னை அழைக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டி பங்கேற்பது சபாநாயகர் பதவியை அவமதிக்கும் செயல் என்றார்.
சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என தொடர்ந்து எதிர்க் கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில்,இந்த வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.சபாநாயகர் மீது அதிருப்தியில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதனை பயன்படுத்தி அவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
No comments