மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஓய்வூதிய சங்க கூட்டமைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் அரை நாள் ஆர்ப்பாட்டமானது இன்று நடைபெற்றது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும், தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொதுத்துறை ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ7850 வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கம்யுடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டாக குறைக்க வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை பொதுத்துறை ஓய்வூதியர் அனைவருக்கும் வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதிகள் முழக்கங்களை எழுப்பினர்.
No comments