தனியார் கார் கம்பெனியில் ரூ. 7 லட்சம் மோசடி செய்த காசாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை ரெட்டியார்பாளையத்தில் தனியார் கார் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் சில நாட்களுக்கு முன்னர் ஆடிட்டிங் நடைபெற்றது அதில் கம்பெனியின் கணக்கில் சேர வேண்டிய ரூ. 7 லட்சம் காணாமல் போயிருந்தது.
விசாரணையில் காசாளராக பணிபுரியும் செல்வகுமார் என்பவர், இந்த கம்பெனியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காசாளராக பணியில் சேரந்துள்ளார். செல்வகுமார் கம்பெனிக்கு சேர வேண்டிய பணத்தை அதன் கணக்கில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் வைத்துள்ளார். இது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். விசாரணையில் செல்வகுமார் அந்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் இழந்தது தெரியவந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments