புயலின் காரணமாக பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோளம் மற்றும் உளுந்து சேதம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புயலின் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்தது ரகுநாதபுரம் கிராமத்தில் பெய்த கனமழையால் அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் காற்றில் சாய்ந்து விளைநிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் உளுந்து பயிர் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை வரை செலவு செய்யப்பட்டு பயிர்கள் நல்ல விளைச்சல் இருந்தும் அந்தப் பகுதியில் பெய்த தொடர் மழையால் மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்கள் சேதமடைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் சேதமடைந்த பயிர்களை இதனால் வரை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட கூட வரவில்லை என குற்றம் சாட்டிய விவசாயிகள்
சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments