Breaking News

ரேஷன் கடைகளில் ஜனவரி 10 தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தகவல்..

 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.77 கோடி வேட்டி 1.77 கோடி சேலைகள் வழங்கும் பணி ஜனவரி 10 ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தார்


 வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 -2025 ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்கியது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கரும்பு அரவையை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு ரூ. 5.35 கோடி மதிப்பில் நல திட்ட உதவிகளை வழங்கினார் 


 அப்போது அவர் பேசியதாவது வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது இந்த ஆலை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த ஆண்டு நல்ல லாபத்தில் ஆளை இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 2023-2024 ம் ஆண்டு 6,300ஏக்கரில் பயிரிடப்பட்ட 2.02,419 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் 1,91,950 குவின்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது மின்சார வாரியத்திற்கு 1,55,87,000 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது 


2024 -2025 ம் நடப்பு ஆண்டில் 6300 ஏக்கர் பரப்பளவில் விளையும் கரும்பு 1.80,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்


 இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கூறுகையில் பொங்கலுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலை வழங்க உள்ளோம் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வந்ததால் வேட்டி சேலை வழங்குவதில் சற்று காலதாமதமானது 


 இந்த ஆண்டு அதுபோன்று நடக்காது டிசம்பர் 31 ம் தேதிக்குள் வேட்டி சேலைகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்காக வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படும் அதன் பிறகு வருவாய்த் துறையிலிருந்து நியாய விலை கடைகளுக்கு வேட்டி சேலை விநியோகிக்கப்பட உள்ளது வேட்டி சேலைகள் தரமாகவும் பல்வேறு ரகங்களில் வழங்கப்பட உள்ளது


 இந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் 90 சதவிகிதம் வழங்கப்படும் ஜனவரி 10 ம் தேதிக்குள் மொத்த பணிகளும் முடிக்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகள் நெசவாளர் சங்கங்கள் தான் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் அதற்கான ஒப்பந்தங்களும் விடப்படுகிறது


 ஆனால் பலர் குறைகளை கூறினார்கள் ஆகையால் நாங்கள் அவற்றை பரிசோதனை செய்து தான் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்குகின்றோம் 15 ரகங்களில் சேலைகளை வழங்க உள்ளோம் 


 திமுக ஆட்சியைப் போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமாக வழங்கவில்லை இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள் இதுகுறித்து கைத்தறி துறை அமைச்சர் என்ற முறையில் நானே பதிலளித்தேன் அதன் பிறகு யாரும் என்னைக் கேள்வி கேட்கவில்லை நூலின் விலையும் உயரவில்லை கட்டுப்பாட்டில் தான் உள்ளது


 காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கட்டுப்பாட்டில் நூல் விலை உள்ளது சைமா எனப்படும் இந்தியா மில் அசோசியேஷன் கோரிக்கையை ஏற்று வரியை நீக்கினோம் மில்களுக்கு மானியம் அளித்தோம்


 இதனால் துணி மில் உரிமையாளர்கள் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி கூற உள்ளனர் மில்களில் இயந்திரங்களை புதுப்பிக்க 8 சதவிகித வட்டி வங்கிகளுக்கு கட்டினால் 6 சதவிகிதம் அரசு அளிக்கிறது நிதிநிலை எப்படி இருந்தாலும் அதனை சரியாக கையாண்டு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் எல்லாத் துறைகளுக்காகவும் சிந்தித்தும் சிறப்பாகவும் செயல்படுகிறார் இவ்வாறு அவர் கூறினார்


 இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் ஈஸ்வரன் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை பதிவாளர் நர்மதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்


- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!