விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விவேகானந்தா பள்ளி குழுமங்களின் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, குட் சமாரிட்டன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் சார்பாக சமீபத்தில் நடந்த புயல் மற்றும் கனமழை காரணமாக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானது. இதனை கருத்தில் கொண்டு விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மற்றும் குட்சமாரிட்டன் பள்ளியின் சார்பாக பேரழிவை ஏற்படுத்திய ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை அளித்ததினால் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை குட்சமாரிட்டன் பள்ளியின் இயக்குனர் அலெக்சாண்டர், சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதுநிலை முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தின் பேரிடர் மேலாண்மை குழுவைச் சார்ந்த முத்துவடிவேல் , ரவிச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதி உதவி அளித்த விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் குட்சமாரிட்டன் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே வி ராதாகிருஷ்ணன் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினார்கள்.
No comments