பெருமாள் பேட்டையில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள் பேட்டையில் புதிய அங்காடி கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதனை ஏற்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து புதிய அங்காடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பெருமாள்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை திமுக மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா M.முருகன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.M.சித்திக், செம்பை ஒன்றிய கழக செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக் , பேரூர் கழக செயலாளர் முத்துராஜா, மாவட்ட மீனவரணி தலைவர் முனைவர் மணிமாறன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
No comments