முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம்: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கக்கன் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சி.எஸ். முரளீதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டி, சின்னகாளை, மிக்கேல், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், சிறுபான்மை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்துவிஜயா, மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன், வெங்கட்சுப்பிரமணியன், மாநகர் மாவட்டச் செயலாளர்கள் நாராயணசாமி, முனியசாமி, மரிய செல்வராஜ், வார்டு தலைவர்கள் சரவணகுமார், ஜெயபாண்டி, கமலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments