முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம்: தூத்துக்குடியில் தமாகவினர் மாலை அணிவித்து மரியாதை!
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கக்கன் சிலைக்கு தமாகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தமாகா தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஆழ்வை வட்டார தலைவர் பொன்ராஜ், இளைஞரணி துணைசெயலாளர் சாம்கிருபாகரன், இளைஞரணி பொதுசெயலாளர் பிரவீன், மாவட்ட செயலாளர் தினகரன், மாநகர பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட தொழிலாளர்அணி தலைவி, வீரலெட்சுமி, மாரி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments