Breaking News

31 மீனவர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு மீன்பிடி உபகரணங்களை திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் வழங்கினார்.

 


முத்தியால்பேட்டை தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் தனது சொந்த நிதியில் தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


 இதன் ஒரு பகுதியாக இன்று அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதியை சோலை நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 31 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


 இதில் கலந்துகொண்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் சோலை நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 31 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களை சொந்த செலவில் இலவசமாக வழங்கினார்.


இந்த நிகழ்வில் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த முன்னாள் தொகுதி மீனவர் அணி துணை செயலாளர் பூபதி, கிருஷ்ணன், தேசப்பன், வேல்முருகன், மணிபாலன் ,நடராஜன் மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் உடன் திமுக முக்கிய பிரமுகர்கள் தொகுதி மக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!