முன்னாள் முதல்வர் எம்டிஆர் ராமச்சந்திரன் மறைவையொட்டி, தமிழக அமைச்சர் நேரு அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி..
புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக மாநில அமைப்பாளருமான எம்டிஆர் ராமச்சந்திரன் அவர்கள் தனது 93 வயதில் கடந்த 8 ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானர். அன்றைய தினம் முக்கிய அலுவல் காரணமாக தமிழக அரசின் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், தலைமை கழகத்தின் முதன்மை செயலாளருமான நேரு, எம்டிஆர். ராமச்சந்திரனின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள இயலவில்லை.
இந்நிலையில் இன்று காலை மடுகரை இல்லத்தில் உள்ள டி. ராமச்சந்திரன் அவர்களின் இல்லத்திற்கு வந்த நேரு அவர்கள், அங்கிருந்த டி. ராமச்சந்திரன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அங்கிருந்த டி.ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகன்களிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், புதுச்சேரி மாநில கழக அமைப்பாளருமான சிவா, நெட்டப்பாக்கம் தொகுதி கழக நிர்வாகிகள் வேலாயுதம், கிருஷ்ணமூர்த்தி, திருநாவுக்கரசு, தெய்வேந்திரன், பூபதி, மோகன் குமார், செல்வம், சக்திவேல், ராமு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments