முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது மேலும் உளுந்தூர்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு ஜெயலலிதா அம்மையாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகரச் செயலாளர் துறை, சாய்ராம், எஸ்.கே.இராமசாமி, முருகன், ராபர்ட்,கோபால், காமேஷ், மோகன், சின்னா, மேலும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக் கழக, நிர்வாகிகள் மற்றும் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments