முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட அவைத் தலைவர்பி.வி. பாரதி மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் சீர்காழியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவை ஒட்டி அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அவை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாரதி தலைமை தாங்கி. ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகர அம்மா பேரவை செயலாளர் மணி, நகர கழக துணை செயலாளர் பரணிதரன், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் நெடுஞ்செழியன், ரவிசண்முகம், சம்பந்தம், விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments