அனந்த மங்கலத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவஞ்சலி உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை..
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குருபூஜை இன்று சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் குருபூஜை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலத்தில் தேமுதிக சார்பில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு மறைந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர் நிகழ்ச்சி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட பிரதிநிதி மாதவன், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ஆர். ராதா கிருஷ்ணன், தேமுதிக தனக்கோடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் அதிமுக ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவரும் ஊராட்சி வார்டு கவுன்சிலருமான சுப்பிரமணியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் வணிகர்கள் கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் பொதுமக்களும் பலர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments