பத்திரப்பதிவின் போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் பத்திர பதிவு அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்டு கதறி அழுதால் பரபரப்பு.
உளுந்தூர்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவின் போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் பத்திர பதிவு அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்டு கதறி அழுதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (85)இவர் இரண்டு ஏக்கர் நிலத்தை தனது மகன் மயில் முருகன் என்பவருக்கு உயிர் எழுதுவதற்காக உளுந்தூர்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய வந்துள்ளார் அப்பொழுது தமிழ்ச்செல்வியின் தம்பி மகன்கள் பாண்டியன் மற்றும் பாபு இருவரும் அந்த இடம் தனக்கு சொந்தமானவை எனக்கூறி பத்திர பதிவு அலுவலக அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பத்திரப்பதிவு நிறுத்த சொன்னதால் இரு தரப்பினர்களின் தகராறு ஏற்பட்டது.
அப்பொழுது பத்திர பதிவு அலுவலகம் மூடப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பாபு பாண்டியன் தரப்பினர் பத்திரப்பதிவு அலுவலக கண்ணாடி உடைத்து அலுவலகம் முன்பு பாபு மற்றும் பாண்டியனின் தாய் ருக்குமணி தரையில் படுத்து உருண்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் இரு தரப்பினரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிரச்சனையில் ஈடுபட்டதால் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் இரு தரப்பினரிடம் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments