வேளாண் இணை இயக்குநர் தலைமையில் மானாவாரி பயிர்களில் நோய், பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த களஆய்வு:
மானாவாரி பயிர்களில் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தவும், விளைச்சலை அதிகரிக்க செய்யவுமான கள ஆய்வு மாவட்ட இணை இயக்குநர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்கள் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் மற்றும் பூச்சித்தாக்குதல் குறித்த கள ஆய்வு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட உமரிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற கள ஆய்வின்போது வ.உ.சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஜெயராஜ் நெல்சன் உளுந்து மற்றும் கம்பு பயிரில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பயறு வகைப் பயிர்களில் விளைச்சலை அதிகரிப்பதற்கான டிஏபி கரைசல் தெளிப்பதன் அவசியம் குறித்த தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளிடம் எடுத்துக்கூறினார். அதேபோல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வோளாண்மை) மனோரஞ்சிதம் பயறுவகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோயினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் சௌந்தர்யா, உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments