திருச்செந்தூர் கடல் அலையில் சிக்கி பெண் பக்தருக்கு கால் முறிவு.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடி அருகே உள்ள நாழிக்கிணற்றில் குளித்து விட்டு குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பெரும்பாலானோர் கடலில் புனித நீராடுவது வழக்கம். இவ்வாறு நீராடும் பொழுது ஒரு சில பக்தர்களுக்கு கடல் அலை வேகமாக கால்களில் பட்டு உடலில் பட்டோ முறிவு ஏற்படுவதுண்டு. அவ்வாறு ஏற்படும் பொழுது திருச்செந்தூர் கோவில் வெளிப்பிரகாரங்களில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்திருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் அவரது மனைவி சித்ரா தனது குடும்பத்தோடு கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
அவர்கள் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடினர். கடற்கரையில் கூட்டம் அதிமாக இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிய சித்ராவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments