உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் 51 வது நினைவு தினம் அனுசரிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்திற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு திமுக நகர செயலாளர் டேனியல்ராஜ், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர அவைத் தலைவர் சிவராஜ், பொதுக்குழு உறுப்பினர் செல்லையா, நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி மதியழகன், மாலதி ராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு, நகர பொருளாளர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்க விஸ்வநாதன், மற்றும் நிர்வாகிகள் ரவி, ராம்குமார், மணிமாறன், கோபி, நீதிபதி, மணிகண்டன், தட்சணாமூர்த்தி , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments