பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்..
பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வட்டாட்சியர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்றது.
விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் உதயகுமார் மாநில செயலாளர் ராம்தாஸ் தமிழ் நாடு விவசாய சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது நாளுக்கு நாள் வனவிலங்குகள் அதிக அளவில் விவசாய நிலங்களில் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது மேலும் குரங்குகளின் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது வனவிலங்குகள் கிராமம் நிலத்திற்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு தெரிவித்தும் இதனால் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு வாரமாக பேரணாம்பட்டு வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் தொடர்ந்து பத்தலபல்லி விவசாயி பேசுகையில் பத்தலபல்லி ஊராட்சியில் சர்வே எண் 93 மந்தவெளி பொது இடத்தை தனிநபர் மனை போட்டு விற்று வருகிறார் பொது சத்திரம் அமைந்துள்ளது அதனுடைய கேட்டை தனிநபர் ஒருவர் இடித்து விட்டு அதன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் மேலும் சுடுகாட்டினை அதனை சுற்றியுள்ள நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
பொது இடத்தில் இருந்த பழமை வாய்ந்த புளிய மரத்தை தனி நபர்கள் வெற்றி அகற்றி அந்த இடத்தை விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் இடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.உடனே வட்டாட்சியர் மற்றும் தணி வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரை வரவில்லைத்து அதன் பட்டா சிட்டாக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.பின்பு மாநில தலைவர் உதயகுமார் பேசுகையில் பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் விவசாயிகள் அதிகாலை காய்கறிகள் கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு இயற்கை உபாதைகள் கழிக்க கழிவறைகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் கூட்டத்தின் வட்டாட்சிய சிவசங்கரன் பேசுகையில் உங்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து மேலும் பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
No comments