பயிரிடப்பட்ட 1000 ஏக்கர் நெல் பயிர்கள் மழைநீர் முழுகியதால் விவசாயிகள் கவலை..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பரிக்கல் பெரும்பாக்கம் குச்சிபாளையம் ஆவலம் திருநாவலூர் மேட்டத்தூர் களத்தூர் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வந்தது இந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த தொடர் கன மழை காரணமாக இந்த பகுதியில் சுமார் 20 செண்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் பெரும்பாலான ஏரி குளங்கள் நிரம்பியது அதனால் பெரும்பாலான ஏரிகள் நிரப்பி உபரி நீர் வெளியேறி வந்ததாலும் கனமழை காரணமாக நெல் பயிர்கள் மழை நீர் அதிக அளவில் தேங்கி இருக்கிறது இந்த உபரி நீர் வெளியேற்ற முடியாத காரணத்தினால் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தொடர்ந்து நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருக்கிறது மேட்டத்தூர் திருநாவலூர் உடையானந்தல் பரிக்கல் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீர் சூழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது இதனால் ஒரு ஏக்கருக்கு 30,000 செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் நெல் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தங்களுக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
No comments