மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர்-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்..
வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர்-2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைத்திற்கும் நாள் கூட்டம் 27.12.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்டாரங்கில் (5 வது தளத்தில்) நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சித் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர் ஆதார அமைப்பு வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துறை, பால்வளத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளார்கள் எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலப்பிரச்சனைகளை களந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments