தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா..
மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகர மின்சாரத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா டிஎஸ்பி பாலாஜி மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் ஐடிஐ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில், தேவையில்லாத நேரங்களில் இயங்கும் மின்விளக்குகள், மின்விசிறிகள், தொலைக்காட்சி பெட்டிகளை அணைப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் சாதாரண குண்டு பல்பு மற்றும் சி.எப்.எல் பல்புக்கு பதிலாக எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமாக 60 முதல் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்தும், நட்சத்திர குறியீடு கொண்ட மின்விசிறி, பம்ப் செட், குளிர்சாதனப் பெட்டி, ஏர் கண்டிஷனர் ஆகிய மின் சாதனங்களை உபயோகித்தால் மின் சக்தியினை சேமிக்கலாம் என்றும் ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட கெபாசிட்டர்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும், வாட்டர் ஹீட்டர் களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துவங்கிய இடத்திலேயே பேரணியை நிறைவு செய்தனர்.
No comments