ஆக்கிரமிப்பில் இருக்கும் சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி ஏரிப்பாக்கம் பழைய காலணி மக்கள் சாலை மறியல்..
ஏரிப்பாக்கம் பழைய காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் இறந்தவர்கள் சடலத்தை நத்தமேட்டு வழியாக 3 கிலோமீட்டர் தொலைவில் சுத்திக்கொண்டு சுடுகாட்டிற்கு செல்வார்கள்.
ஏரிப்பாக்கம் பழைய காலணி பகுதி மக்கள், சடலத்தை எடுத்துச் செல்வதற்கு, 17 அடி அகலம் கொண்ட பழைய பாதை இருப்பதாகவும், அந்த இடத்தை தற்போது சிலர் ஆக்கிரமித்து வைத்து பயன்படுத்த வருகின்றனர். இதனால் சடலத்தை சுற்றிக்கொண்டு தான் எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த சுடுகாட்டு பாதை வழியாக ஏரிப்பாக்கம், நத்தமேடு மற்றும் ஏரிப்பாக்கம் பழைய காலணி பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இரு ஊர்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இறப்பு நேர்ந்தால் அந்த வழியாக சடலத்தை கொண்டு செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஏரிப்பாக்க, நத்தமேடு பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு மற்றும் தாசில்தாரிடம் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டு தர கோரி முன்னதாக மனு கொடுத்துள்ளனர்.மனு கொடுத்து பல மாதங்களாகியும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments