அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் 2,161 பேருக்கு புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி உதவித்தொகை..
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்துவிட்டு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டத் தொடக்க விழா மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை வகித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தற்போது 29 கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகள் 2,161 பேருக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments