புயல் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியதால் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து நெரிசல்..
வங்கக்கடலில் உருவான புயல் கரையை கடந்து வரும் நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வண்டிபாளையம் அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே விழுந்ததால் இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வறை வாகனங்கள் அணிவகுத்து நின்றது
தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் வாகனங்களை எதிர் திசையில் உள்ள சாலையில் அனுப்பி வைத்தனர் தொடர்ந்து கீழே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் திருநாவலூர் தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே மரம் விழுந்து இருந்ததால் அந்த வழியில் வந்த அரசு பேருந்து ஒன்று பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை பின்பக்கமாக இயக்கிய போது பேருந்து சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது தொடர்ந்து திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி மூன்று கார்கள் சேதம் அடைந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகனங்களை ஒழுங்குபடுத்தி எதிர் திசையில் அனுப்பி வைத்தனர்.
No comments