மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது..
வேலூரில் காட்பாடி தாலுக்கா சதுரங்க கழக மற்றும் பாராஸ் மஹால் பவித்ரா செஸ் அகடாமி இணைந்து வரும் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் உள்ள பாராஸ் மஹால் மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியின் சிறப்பு விருந்தினராக அபயகுமார் ஜெயின் கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிகள் மற்றும் பெண்களுக்கு நினைவைக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில சதுரங்க களத்தின் துணைத் தலைவர் மணிகண்ட சாமி கலந்து கொள்ள உள்ளார்.
இந்தப் போட்டிக்கு தலைமை ராஜா சங்கர் முன்னிலையிலும் செயலாளர் மனோகரன் ஆகியோர்கள் இந்தப் போட்டியில் 15,17,19 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலர்களும் கலந்து கொள்ளலாம் மொத்தம் 80 பரிசு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments