புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்து சேவையை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த நவகிரக ஸ்தலமான திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் இருந்து திருநள்ளார் சனி பகவான் ஸ்தலத்திற்கு புதிய பேருந்தும், சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் வரை செல்லும் பேருந்தை நாயக்கர் குப்பத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன், கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றே பெருந்தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் தமிழ்நாடு நாகை அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் ராஜா வணிக மேலாளர் சிதம்பரகுமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
No comments