Breaking News

ஊருக்குள் புகுந்து இளம் பெண்ணை கொன்ற சிறுத்தை உடனடியாகப் பிடிக்க மாவட்ட ஆட்சியர் வனத்துறைக்கு உத்தரவு..

 


வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த மேல்மாயில் துருவம் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் அஞ்சலி வயது(22) இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார் 


 சிவலிங்கத்தின் கிராமம் காப்புக் காட்டை ஒட்டியுள்ளதால் அங்கு அவ்வப்போது வனவிலங்குகள் வருவதாக கூறப்படுகிறது 


 இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் சிவலிங்கத்தின் மகள் அஞ்சலி வீட்டின் வெளியே நின்று கொண்டிருக்கும்போது காப்பு காட்டில் இருந்து வந்த சிறுத்தை அஞ்சலியை தாக்கி காட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளது 


 அஞ்சலியின் அலறல் சத்தம் கேட்டு அருகே உள்ள அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலியை சிறுத்தை இழுத்துச் சென்றதைக் கண்டு கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டி சென்றுள்ளனர் 


 அப்போது பொதுமக்களைக் கண்டதும் அந்த சிறுத்தை அஞ்சலியை வீட்டின் அருகே உள்ள காப்பு காட்டில் விட்டு தப்பி சென்றது 


 உடனடியாக பொதுமக்கள் அஞ்சலியின் அருகே சென்று பார்த்தபோது சிறுத்தை கடித்ததில் கை, கால்கள் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார் 


 பின்னர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் வனத்துறை மற்றும் கே. வி. குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் அங்கு விரைந்து சென்றனர்


 தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, கே. வி. குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்


 கிராமத்திற்குள் வந்து சிறுத்தை இளம் பட்டதாரி பெண் அஞ்சலியை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது 


 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் மேல்மாயில் துருவம் கிராமத்தில் சிறுத்தை கடித்து பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம்


 தொடர்ந்து இங்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை பணியாளர்கள் இங்கே முகாமிட்டு விரைவில் சிறுத்தையை கூண்டு வைத்த பிடிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார் 


- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!