டிசம்பர்-26 சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மலர்வளையம் வைத்து அஞ்சலி..
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை சீறிப் பாய்ந்தது. இந்தோனேசியா தொடங்கி இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா என பல நாடுகளின் கடலோர மக்கள் இப்பேரலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலானோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியால் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கடலோர கிராம பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டது 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர்.
இந்நிலையில் சுனாமிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தரங்கம்பாடி வட்டம் பொறையாறில் உள்ள சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி பேரூராட்சி துணை தலைவர் பொன் ராஜேந்திரன் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments