ஊராட்சித்துறையின் தூய்மை பாரத இயக்கத் திட்டப் பணிகள்'விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்..
மயிலாடுதுறை வட்டாரம் மாப்படுகை மற்றும் குத்தாலம் வட்டாரம் வானதிராஜபுரம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் தூய்மை பாரத இயக்கத் திட்டப் பணிகள் சார்பில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல்,நூறு சதவீதம் வகைப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தபோது..
பொதுமக்கள் முழு சுகாதார பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.தரம் பிரித்து வழங்கும் குப்பைகளை எளிதில் கையாண்டு மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும். பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை தனியாகவும் சேகரித்து அவற்றை தினசரி வீடுதோறும் வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பச்சைநிற கூடையில் மக்கும் குப்பைகளான உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், தோட்டக்கழிவுகள், மீன் முட்கள், எலும்பு துண்டுகள், வீணான உணவுபொருட்கள், நீலநிற கூடையில் மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பாலித்தீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள், எண்ணெய் கவர்கள், கண்ணாடி பொருட்கள், பயனற்ற எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு மெட்டல், அலுமினியம், தோல் பொருட்கள், தனியாக தரவேண்டிய இதர கழிவுகள் சானிட்டரி நாப்கின், டயப்பர்ஸ், மருத்துவக் கழிவுகள் போன்றவைகளை முறையாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். எனவே, தூய்மையான ஊராட்சியாக உருவாக அனைத்து தரப்பு மக்களும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தூய்மையான நகரமாக உருவாக முன்வர வேண்டும்
தொடர்ந்து குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் ,உதவி திட்ட அலுவலர் சங்கர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (மயிலாடுதுறை) சுதாகர்,(குத்தாலம்) புவனேஷ்வரி, ஷோபனா மற்றும் அரசு அலுவலர்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments