உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மிக இளையோருக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்.
தமிழ்நாடு துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மிக இளையோருக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மா ரஜினி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார் மேலும் மாவட்ட அளவிலான இந்த போட்டியில் தேர்ச்சி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் அனைவரும் தங்களது முழு திறமையை காட்ட வேண்டும் என இளம் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுறுத்தினார் இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் பாலா அருள் செல்வன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி ஒன்றிய செயலாளர்கள் பஞ்சி குமார், மலர்விழி திருமாவளவன் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் நகர செயலாளர் சுப்பராயன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments