நாகேஸ்வர முடையார் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்திதானம் தனுர் மாத வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வர முடையார் சுவாமி கோயில் உள்ளது. ஆதி ராகு ஸ்தலமான இக்கோயிலில் அமிர்த ராகு பகவான் தனி சந்நிதியில் அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகை புரிந்தார் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து நாகேஸ்வர முடையார், பொன்னாகவல்லி அம்மன், ஆதி ராகு பகவான், சனி பகவான் உள்ளிட்ட சாமி சந்திதிகளில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு மேற்கொண்டார். அப்போது தமிழ்ச்சங்கத் தலைவர் இ. மார்கோனி உட்பட பலர் உள்ளனர். இதே போல் சீர்காழி அருகே உள்ள திருமயிலாடி சுந்தரேஸ்வரர், மற்றும் வடிவேல் குமரன், ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜர் சுவாமி கோயில், மகேந்திரப்பள்ளி ஸ்ரீ வடிவாம்பிகை சமேத ஸ்ரீ திருமேனி அழகர் திருக்கோவில், மாதானம் முத்துமாரியம்மன் மற்றும் பசுபதிஸ்வரர் கோயில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர், திருக்கருக்காவூர் வெள்விடைநாதர் சுவாமி கோயில், செம்மங்குடி நாகநாதர் சுவாமி கோயில், கொண்டல் குமார சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மார்கழி திங்கள் முதல் நாளையொட்டி ஆதீனத்துக்கு மணி விழா நடைபெறுவதையொட்டியும் மார்கழி மாதத்திற்குள் 300 கோயில்களுக்கு நேரில் சென்று வழிபட முடிவு செய்து தனூர் மாத தரிசனத்தை மேற்கொண்டார்.
No comments