சீர்காழியில் வாடகை கடை வணிகர்களை நசுக்கும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வாடகை கடை வணிகர்களை நசுக்கும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக சீர்காழி வர்த்தக நல சங்கத்தின் சார்பில் சீர்காழி தலைமை தபால் நிலைய அலுவலகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி வர்த்தக நல சங்கத்தின் தலைவர் கோபு தலைமை தாங்கினார். அன்வரலி முன்னிலை வகித்தார். ஆர். எஸ். பி. பன்னீர்செல்வம், அப்பாஸ்அலி, நலம் சதாதாகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வாடகை கடையில் வணிகம் செய்யும் வணிகர்கள் வாடகை கட்டணம் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு 18 காசு வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு வஞ்சிக்கிறது. வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் வாடகை கட்டண வரியான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாடகை கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டார்கள். நிறைவாக வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments