Breaking News

மத்திய குழுவிடம், உரிய ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் அளிக்க தவறியதால் மத்திய அரசின் நிவாரண நிதி கிடைப்பதில் தாமதம்.

 


புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், 

புதுவைக்கு பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவிடம் பாதிப்புகள் குறித்த விவரங்கள். அதற்கான புகைப்படங்கள். வீடியோ ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் அளிக்க தவறியதால்,மத்திய அரசிடம் இருந்து நமக்கு உடனடியாக வரவேண்டிய பேரிடர் நிவாரண உதவி இன்று வரை மத்திய அரசால் வழங்கப்படவில்லை.இதை காரணமாக வைத்து மத்திய பாஜக அரசு நிவாரண நிதி வழங்காதது கண்டிக்கத்தக்கது.

வீடூர், சாத்தனூர் அணைகளில் இருந்து விநாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 3 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. 

இந்த பாதிப்புக்கான ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் மத்திய குழுவிடம் வழங்க தவறியது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை தலைமைச் செயலாளர் உடனடியாக எடுக்க வேண்டும்.

அரசால் அறிவிக்கப்பட்ட புயல் நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் அனைத்து குடும்பத்தினருக்கும் சுணக்கில் போடப்பட்டுள்ளது. இதை வங்கிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏழை மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகள், வட்டி தொகைகள், அபராத வட்டி தொகைகள், குறைந்தபட்ச இருப்பு தொகை ஆகியவற்றை பிடித்தம் செய்கின்றன.அரசால் போடப்பட்டுள்ள நிவாரணத் தொகையில் வங்கிகள் எந்த பணத்தையும் பிடித்தம் செய்ய கூடாது என அரசு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

No comments

Copying is disabled on this page!