கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி ஊழல்- தனிநபர் கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை.
இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் ச.கருப்பையா மற்றும் சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் பல கோடி ரூபாய் அளவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறைகேடில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது துரை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் தனிநபர் கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வின் போது, செய்தியாளர்களை சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ப்ளீச்சிங் பவுடர் வாங்காமல் வாங்கியதாகவும் மக்களின் வரிப்பணத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டறிந்து கரூர் மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதை தலித் விடுதலை இயக்கம் வரவேற்கின்றது. அதே சமயம், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எவ்வித ஒப்பந்த புள்ளிகளும் கோராமல் பர்னிச்சர்கள் வாங்கியதாகவும் ஆழ்குழாய்க் கிணறுகள் பழுது பார்த்ததாகவும் பல கோடி ரூபாய் முறுகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் ஆனால் எந்தத் துறையில் ஊழல் நடந்துள்ளது.
அதே துறை சார்ந்த அதிகாரிகளை வைத்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்வது சரியாக இருக்காது, எனவே தனிநபர் விசாரணை கமிசன் அமைத்து ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளை பணிகளை நீக்கம் செய்ய வேண்டும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதேபோல கடவூர் வட்டாட்சியர் இளஞ்செழியன் சட்ட விரோத கல் குவாரி நடத்துவோரிடம் முறைகேடாக பணம் பெற்று சொகுசு பங்களா ஒன்று கட்டி, வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் கடவூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
No comments