திமுக சார்பில் தந்தை பெரியார் நினைவு தினம் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் திமுக சார்பில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு செம்பனார்கோயில் கீழமுக்கூடில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அனைவரும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments