சுயேச்சை எம்எல்ஏக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்காது என திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் சிவா,
2 சுயேச்சை எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ஒருவர் பாஜகவின் பி டீமாக செயல்படும் சுயேச்சை. அதோடு சட்டமன்றத்தில் சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுகிறார், ஒருதலைபட்சமாக நடக்கிறார் என்றால் தீர்மானத்தை கொண்டுவரலாம்.
சபாநாயகர் வழங்கும் தீர்ப்பும், எதிர்கட்சிகளுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம். தற்போது சுயேச்சை எம்எல்ஏக்கள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.
ஒருவேளை அவர்களின் உள்நோக்கம் நிறைவேறினால் தீர்மானத்தை வாபஸ்பெற வாய்ப்புள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுகவின் ஆதரவு இல்லை.வேடிக்கை பார்ப்போம் என்றார்.
காங் ஆதரவு என்பது அவர்கள் முடிவு.திமுகவை கலந்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் அறிவிக்கவில்லை.காங் தீர்மானத்தை கொண்டு வந்தால் தலைமையிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என சிவா கூறினார்.
No comments