திருக்கடையூரில் தேமுதிக சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவஞ்சலி நிகழ்ச்சி அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோவில் ஒன்றியம் திருக்கடையூர் கடை வீதியில் தேமுதிக சார்பில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குருபூஜை ஒட்டி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது அன்னதானம் வழங்கப்பட்டது தேமுதிக தெற்கு ஒன்றியம் துணைச் செயலாளர் கே.ஆர். பாபு தலைமையில் ஏற்பாட்டில் மாவட்ட கேப்டன் மன்ற பொறுப்பாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ் கலந்து கொண்டு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட பிரதிநிதி சகாதேவன் பொறுப்பாளர் பிரவீன் மற்றும் அதிமுக, திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது பேருந்து பயணிகளுக்கும் அன்னதானம் வழங்கினர்.
No comments