விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கிய தேமுதிகவினர்.
துப்புரவு பணியாளர்களுக்கு புடவை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய தேமுதிகவினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கூத்தனூர் தேமுதிக கிளை கழகம் சார்பில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு தேமுதிகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது இதே போல் தூய்மை பணியாளர்களுக்கு புடவை மற்றும் அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு நோட்டு பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் தேமுதிக நிர்வாகிகள் வழங்கினர்.
No comments