சீர்காழியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தேமுதிக நிறுவன தலைவர்,கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்ட அவருடைய திருவுருவ படத்திற்கு தேமுதிக நகரக் கழக செயலாளர் கவுன்சிலர் ராஜசேகர் தலைமையில் புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கே. எஸ். கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் சி.டி. பாண்டியன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் எஸ். பி. ஆர். பாஸ்கர், வழக்கறிஞர் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவபர், ஒன்றிய இணைச் செயலாளர் வடிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், கேப்டன் மன்ற செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
No comments