ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி. நேரு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட இளங்கோ நகர் வார்டு எல்லையம்மன் கோவில் வீதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் இருபுறமும் வாய்க்கால் அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தொகுதி எம்எல்ஏ நேரு கலந்துகொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறித்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மனிதநேய மக்கள் சேவை மைய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments