காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் சட்ட மாமேதை அம்பேத்கரை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி நகர தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஞானசம்பந்தம் ,பாலசுப்பிரமணியன், ரவி, கார்த்திக், பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜ்குமார் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் KPSM மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அமித்ஷாவை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் காந்திமதி சிவராமன், மொராஜ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் நன்றி கூறினார்.
No comments