அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமிஷாவை பதவி விலக கோரி காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன்பு சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் A.V.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் பங்கேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments