டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணித போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாணவனுக்கு பாராட்டு.!!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் (சில்வர் ஜீப்ளி மெட்ரிக்குலேசன்) மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய்ராம். இவர் கடந்த நான்கு வருடங்களாக மன எண் கணித பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில் டெல்லி யுனிவர்சிட்டி சார்பில் மன எண் கணித போட்டி (யுனிவர்சல் கான்செப்ட் ஆஃப் மென்டல் அரித்மெடிக் சிஸ்டம்) சர்வதேச அளவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில், கலந்து கொண்ட மாணவன் சஞ்சய்ராம் எட்டு நிமிடத்தில் 200 மனக்கணக்குகளை விடை அளிக்க வேண்டிய போட்டியில் 160 வினாக்களுக்கு விடை அளித்து, போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். இவருக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த அவருக்கும், அவரது பெற்றோர்கள் வினோத்குமார் விஜயலட்சுமி ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
No comments