ஈரோட்டில் தமிழ்நாடு தேங்காய் நார் உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு தேங்காய் நார் உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொருளாளர் மல்கர் சாய்பு வரவேற்புரையாற்றினார். சோலார் திட்டத்தின் விளக்கதினை பற்றி செல்வக்குமார் விளக்கவுரையாற்றினார். தலைவர் பூச்சாமி தலைமை உரையாற்றினார்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட சங்கத் தலைவர் தனசேகர் ஏற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தீர்மானங்களை வாசித்து பொதுச்செயலாளர் சேது (எ)பழனிச்சாமி நிறைவுரையாற்றினார். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு 21 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 75 பேர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் கோவை மாவட்ட தென்னைநார் உற்பத்தியாளர் அசோசியேசன் செயலாளர் அருண் நன்றி உரையாற்றினார்.
No comments